ரஷ்யாவிற்கு வலுவான இறுதி அடி… முன்னாள் அமெரிக்க தளபதி எச்சரிக்கை.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில் மிக வலுவான நாக் அவுட் அடியை உக்ரைன் விரைவில் ரஷ்யாவிற்கு வழங்கும் என அமெரிக்க முன்னாள் தளபதி மார்க் ஹெர்ட்லிங் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 118வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் போர் தாக்குதலானது உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் தீவிரமடைந்துள்ளது.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்த சமீபத்திய அறிவிப்பில், ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் உக்ரைனிய படைகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன, ஆயிரக்கணக்கான உக்ரைனிய வீரர்கள் கொல்லப்படுகின்றனர்.
இந்தநிலையில், முன்னாள் அமெரிக்க லெப்டினன்ட் ஜெனரல் மார்க் ஹெர்ட்லிங் தெரிவித்துள்ள கருத்தில், பீரங்கிகளின் எண்ணிக்கை அதிகளவு போர் முனையில் இருந்தாலும், மேற்கத்திய ஆயுதங்கள் தற்போதுப் போரின் முன்களத்திற்கு வர இருப்பதால், உக்ரைன் படைகள் அதிகப்படியான முன்னேற்றங்களை விரைவில் பெரும் எனத் தெரிவித்துள்ளார்.