மேக்ஸ்வெல் 5 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில்……
டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இலங்கைக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 3-2என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முக்கியமான வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்து வருகிறார்.
ஆனால் 2013-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல், வெறும் ஏழே டெஸ்ட் போட்டிகளில் ஆடி 339 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும். இதையும் படியுங்கள்: கடைசியாக 2017ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார்.
அதன்பின்னர் 5 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத மேக்ஸ்வெல்லுக்கு தற்ப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது. டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் ஹெட்டுக்கு பதிலாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக போராடும்.