பெட்ரோல் நிலையங்களை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் இறக்குமதி மற்றும் சில்லறை சந்தைகளை திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் ஏனைய வங்கிகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் மற்றும் அந்நிய செலாவணி தேவைகள் இன்றி இயங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
அந்நியச் செலாவணி தேவைகளில் இருந்து விலக்கு அளிப்பது முதல் சில மாதங்களுக்கு செயல்பட அனுமதிக்கும் என்றார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிறுவனங்களின் சேவைக் கட்டணத்துடன் வழங்கல், இருப்பு சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கான சேவை வழங்குநராக இருக்கும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
CEYPETCO இன் கீழ், லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (LIOC) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு 1190 தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் புதிய விற்பனை நிலையங்கள் இருக்கும் என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த சுத்திகரிப்பு நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் இன்று காலை கட்டார் நோக்கிச் சென்றுள்ளனர்.
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கட்டார் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் இருவரும் கலந்துரையாடவுள்ளனர்.