மக்கள் போராட்டத்தை தடுக்க இராணுவம் வராது : அனுர திஸாநாயக்க

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பொலிசார் ஆதரவு வழங்குவார்கள் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ன சொன்னாலும் மக்கள் வீதிக்கு வருவதைத் தடுக்க இராணுவம் தலையிடாது என்ற உத்தரவாதம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ஆண்டுவ பண்ணமு’ (அரசை துரத்துவோம்) போராட்டத் தொடரின் பாணந்துறை கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.