நேர்மையான சர்வகட்சி அரசை உடன் நியமிக்குக – கோட்டாவுக்கு மகாநாயக்க தேரர்கள் அவசர கடிதம்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மகாநாயக்க தேரர்கள் அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளனர்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல், மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுதல் மற்றும் நேர்மையான சர்வகட்சி அரசை உடனடியாக ஸ்தாபித்தல் உள்ளிட்ட 10 விடயங்கள் இந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.