நெல் உலர்த்தும் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்
நெல் உலர்த்தும் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்
17/8/2020 ல் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையின் உத்தியோகத்தரால் நெல் உலர்த்தும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.
கட்டுமானம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
எல்லோரும் பார்வை இடலாம் எனதெரிவித்தார்
20′ × 6′ × 5′ தொட்டி ( சீமெந்து)
2500 Kg நெல் தினம்தோறும் உலர்த்தலாம்
மிக குறைந்த மனிதவலு
மிக குறுகிய இடப்பயன்பாடு
சூரிய ஒளி அவசியமானது
மழைக்கும் பாதுகாப்பு
ஒரே நாளில் 14 வீததிற்கு உலரும் தன்மைகட்டுமானத்திற்கான செலவு 75000 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது
அன்றைய தினமே விவசாயிகளிற்கான புதிய நெல் இனம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது
விவசாய சமூகத்திற்கு சிவப்பு இன புதிய நெல் வர்க்கம் ஒன்று பிரதி விவசாய பணிப்பாளர் விதைகள் உற்பத்தி பகுதியால் அறிமுகம் செய்யப்பட்டது.
சிறந்த விதை நெல் உற்பத்தியாளர்களிற்கு விதை நெல் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.நெல் இனத்தின் பெயர் B W 312 சிவப்பு 3 மாத வயது. கட்டை இனம் என்பது குறிப்பிடத்தக்கது.