திருமலை எரிபொருள் நிலையத்தில் மோதல் – இளைஞர் அவசர சிகிச்சைப் பிரிவில்….
திருகோணமலை – லிங்கநகர் ஐ.ஓ.சிக்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் இன்று இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியைச் சேர்ந்த டி.டிலூபர் (வயது 23) என்பவருக்குத் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் நின்ற நிலையில் இன்று ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது எனவும், இதையடுத்துக் குறித்த இளைஞரை மற்றொரு இளைஞர் பொல்லால் தாக்கினார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற இளைஞர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குகுதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ளார் எனவும், அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.