பதிவுசெய்யப்பட்டுள்ள சனசமூக நிலையங்களுடனான கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள சனசமூக நிலையங்களுடனான கலந்துரையாடல் சபையின்  தவிசாளரின் தலைமையில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சபை உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இன்று(2020.08.20) நடை பெற்றது.

சனசமூக நிலையங்களின் நிர்வாகத்தினை புதுப்பித்தல் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகள் பற்றிய விடயங்கள் சபை நிதி மற்றும் ஏனைய நிதிகள் மூலம் இவ் வருடம் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றிய விடயங்கள் சனசமூக நிலையங்களுக்கான மானிய நன்கொடை வழங்குதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக கிராமங்கள் தோறும் மரண சகாய குழுக்களினை சனசமூக நிலையங்கள் ஊடாக உருவாக்கி அதன் மூலம் வாழ்வாதார ரீதியில் பின்தங்கி வறுமையுள்ள மக்களின் மரணச்சடங்கு நிகழ்வுகளுக்கு உதவி புரிவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி ஆராயப்பட்டதுடன் அக் குழுக்களினை வளர்த்தெடுப்பதற்கு சபை எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.