இந்தியா செல்ல முயன்ற 9 பேர் மன்னாரில் கைது!
மன்னார் – தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்கலாக 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 9.35 மணியளவில் தாழ்வுபாடு கடற்கரைப் பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
வவுனியா மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு பெண், ஒரு சிறுவன், ஒரு சிறுமி உள்ளடங்கலாக 7 பேரும், மன்னாரைச் சேர்ந்த 2 படகோட்டிகளும் அடங்குகின்றனர்.
இவர்கள் கடற்படையினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனைகளின் பின்னர் 9 பேரும் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.