தாமதமின்றி இரட்டை குடியுரிமை வழங்கும் செயல்முறை
இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கையை தாமதமின்றி முன்னெடுப்பதற்கு விசேட கொள்கை முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா, இலங்கையில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்த 760 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, பாதுகாப்பு அனுமதி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும். பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற்ற ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்படுவதை இது தவிர்க்கும்.