போராட்டத்தை தடுக்க முடியாத பொலிஸ் மா அதிபர் விடுத்த வேண்டுகோள்!
சட்ட கட்டமைப்பிற்குள் மக்கள் போராட்டம் நடத்தும் உரிமையை அனுபவிக்க வேண்டும் என்று காவல்துறை மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதியான முறையில் கூடி போராட்டம் நடத்தும் மக்களின் உரிமையை பொலிசார் மதிக்கின்றனர் எனவும் எனினும், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடும் நபர்களை கண்மூடிக் கொண்டு கையாளும் தன்மை பொலிஸாருக்கு இல்லை எனவும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார். குடிமக்களின் ஒன்றுகூடல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாப்பதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பும் பொலிஸாருக்கு உண்டு என பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் சில தினங்களில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவைப் பெற பொலிஸார் முயற்சித்த போதிலும் அதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்க மறுத்துள்ளது.