பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ரணில் இணக்கம்!
பிரதமர் பதவியை இராஜினாமா செய்து சர்வகட்சி ஆட்சிக்கு அதிகாரம் வழங்க தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளமை, உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் இந்த வாரம் தீவுக்கு விஜயம் செய்யவுள்ளமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை அறிக்கை என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொள்வதாக அவர் கூறுகிறார். வழங்கினார்.
எனவே, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதன்படி கட்சித் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.