இலங்கைக்கு இந்தியப் படையினர்? – மறுக்கின்றது உயர்ஸ்தானிகராலயம்.

இலங்கைக்கு இந்தியப் படையினர் அனுப்பப்படுகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது போன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். இந்தக் கடினமான காலகட்டத்தைக் கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும்.

இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகின்றது” – என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாகத் தெரிவான ராஜபக்சக்களுக்கு இராணுவ உதவிகள் தேவைப்பட்டால் இந்தியா வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி நேற்று ‘ருவிட்டர்’ பதிவொன்றின் ஊடாகக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.