ஏ – 9 வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
எரிபொருள் வழங்கக் கோரி ஏ – 9 வீதியை மறித்து யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காகக் காத்திருந்தவர்களே ஏ – 9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்ததால் அங்கு நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொதுமக்களே வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஏ – 9 வீதி வழியான போக்குவரத்து ஒரு சில மணித்தியாலங்கள் தடைப்பட்டுக் காணப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் மற்றும் போராட்டகாரர்கள் யாழ். மாவட்ட செயலருடன் கலந்துரையாடினர்.
காத்திருப்பவர்களுக்கு எரிபொருள் வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.