அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் கால் பதிக்க கோட்டாபயவுக்கு தடை
அமெரிக்கா செல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ என்ற இந்திய நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.
இதேவேளை, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி கோட்டா இந்தியா சென்று , அங்கிருந்து இன்னொரு நாட்டுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும், ஆனால் அந்த விமானத்தை அங்கு தரையிறக்க இந்தியா அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிந்திய செய்தி
கோட்டாவின் விசா கோரிக்கையை
அடியோடு நிராகரித்தது அமெரிக்கா
‘த இந்து’ பத்திரிகை செய்தி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது என இந்தியாவின் ‘த இந்து’ பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, ‘த இந்து பத்திரிகை’ இந்தத் தகவலை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தனர் என்று பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.