18-45 வயதினருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை இலவசமாக வழங்க முதல்வர் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், 18-45 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை மருந்தை இலவசமாக வழங்குமாறு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மத்திய அரசை வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
தடுப்பூசியின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதும், சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை அளவைப் பெறாததும் இதற்கு ஒரு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தை இலவசமாக வழங்குகிறது என்று குறிப்பிட்ட கெலாட், நாட்டில் உள்ள 18-45 வயதுக்குட்பட்டவர்களுக்கும் அதே சலுகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.