சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தை தோல்வி! மீண்டும் தொடங்க ஒரு நிபந்தனை!
சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப மட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், உயர்மட்ட அதிகாரிகளுடன் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நம்புவதாகவும் IMF பேச்சாளர் Gerry Rice தெரிவித்துள்ளார்.
நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்காக தற்போதைய அரசியல் நிலைமை தணியும் வரை காத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
We are closely monitoring the ongoing developments in Sri Lanka ??. We hope for a resolution of the current situation that will allow for resumption of our dialogue on an IMF-supported program. pic.twitter.com/xo1jNoGTea
— Gerry Rice (@IMFSpokesperson) July 14, 2022