யாழ்ப்பாண திரைப்படக் கல்லூரி திறப்பு

“யாழ்பாண திரைப்படக் கல்லூரி” திறப்புவிழா நேற்று இடம்பெற்றது. இல.15 சிறாம்பிட்டிய வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் கலை, பண்பாட்டு, வரலாறு அம்சங்களை ஆவணப்படுத்தும் நோக்கிலும் இளைஞர் யுவதிகளுக்கு இலத்திரனியல் ஊடகம், திரைப்படக்கலை தொடர்பான கற்கை நெறிகளை கற்பிக்கும் நோக்கிலும் “யாழ்ப்பாண திரைப்பட கல்லூரி” திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள்,  திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.