பஞ்சாபில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு
பஞ்சாபில் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், ரம்மான் மண்டியில் உள்ள பொது பூங்காவில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட நகர்ப்புற காங்கிரஸ் தலைவர் அசோக்குமார் சிங்லா வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையினர் தரப்பில் தெரிவித்திருப்பதாவது, காந்தி சிலையை வியாழன் மற்றும் வெள்ளிக்கு இடைப்பட்ட இரவில் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
எனவே, குற்றவாளிகள் விரைவில் பிடித்துவிடுவோம் என்றனர்.