19ஆம் திருத்தம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அறிக்கை

215 உறுப்பினர்களின் விருப்பத்துடனேயே 19 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையில் உள்ளடங்கிய விபரங்களாவன

19ஆவது திருத்தம் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்பானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவம் வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட மறுசீரமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

அதற்கமைய, தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானவர்கள் 19 ஆவது திருத்தத்திற்கு இணங்கியவர்கள்.

இந்த திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முன்னாள் சபாநாயகர் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.