விற்பனைக்கு தயாராகவிருந்த 113kg தங்கூசி வலைகள் நீரியல்வள திணைக்களத்தினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றிலிருந்து மீன்பிடிக்கு தடை செய்யப்பட்டுள்ள தங்கூசி வலைகள் நீரியல்வள திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
63 கிலோ கிராம் எடையுடைய ஒரு பொதியும் 50 கிலோ எடையுடைய இன்னொரு பகுதியும் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் தங்கூசி வலை பாவித்து மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தங்கூசி வலை மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுவருவோர் நீரியல்வள திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற நிலையில் நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் தங்கூசி வலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள்குறித்த கடையினை சோதனை செய்தபோது 113 கிலோ கிராம் எடையுடைய தங்கூசி வலைகள் மீட்கப்பட்டுள்ளன
குறித்தகடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.