ரணிலின் படையினரைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை துடைத்தெறியும் ஆட்டம் நள்ளிரவில் ஆரம்பம்…! (வீடியோ)
இரண்டு சதவீத மக்கள் ஆதரவு கூட இல்லாமல் ராஜபக்ஷவை பாதுகாக்க ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவின் , முப்படைகளும், காவல்துறையும் காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தின் களத்தை அழிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கிடைக்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை காலிமுகத் திடலை விட்டு செல்லப் போவதாக தெரிவித்திருந்த சமயத்தில் , காலிமுக மைதானத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து பயணிகளுக்கு தடியடி கொடுத்து போராட்ட களத்தை அகற்ற ஆரம்பித்துள்ளனர். புதுமாத்தளனை போல் ஒரு மூலையில் இருந்து அனைவரையும் துடைத்தெறிய வேண்டும் என்பது அவர்களின் திட்டம் என தோன்றுகிறது.
இன்று பிற்பகல் முதல் போராடி வரும் மக்கள் கைப்பற்றப்பட்ட அரச கட்டிடங்களை விட்டு வெளியேறி நாளை பிற்பகல் 2 மணியளவில் செல்வதற்காக ஒன்றுகூடி இருந்த பகுதியையே இவர்கள் சுற்றி வளைத்து அச்சமான ஒரு சூழலை உருவாக்கி வருகின்றனர்.
அத்தோடு சட்டத்தரணிகளான நுவான் போபகே, லஹிரு சில்வா, அனுரங்க (09 தாக்குதலில் அங்கவீனமானவர்) மற்றும் அங்கவீனமான போர்வீரர் ஒருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் பத்து பேர் கடுமையாக தாக்கப்பட்டனர்
காலிமுகத் திடல் முகப்புப் போராட்டம் நடந்த இடத்தில் இருந்த தகவல் தொழில்நுட்ப மையம், ஊனமுற்ற போர்வீரர்களின் கூடாரம், மக்கள் சக்தி உணவகம், SYUவின் கூடாரம், பார்வையற்றோர் கூடாரம், கேட் 0 ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.
நாளை இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பிய கோட்டாவை இலங்கைக்கு அழைத்து வர முயன்று வரும் ரணில் விக்ரமசிங்க, இந்த போராட்டத்தை தடுக்க மக்களை நாய், பூனை போல் நடத்துகிறார் என அங்குள்ளோர் குற்றம் சுமத்துகின்றனர், ..