வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய நடைமுறை.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய நடைமுறை.
ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வித்திணைக்களங்களிலும், பாடசாலைகளிலும் எழும் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு பெறுவதற்காக வடக்கு மாகாண கல்வி அமைச்சின்மீது நம்பிக்கை வைத்து முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.
அந்த முறைப்பாடுகளை விசாரணை செய்து அத்தகைய முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வினை வழங்காத முறையாக விசாரணை செய்யாத வடக்கு மாகாண கல்வி அமைச்சு முறைப்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்கும் புதிய நடைமுறையை கையாண்டு வருகின்றமை தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளது.
இது தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.
அதிபர்கள், ஆசிரியர்கள் தரப்பில் இருந்து பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த முறைப்பாடுகள் பலவற்றிற்கு வருடக்கணக்காகியும் தீர்வுகள் வழங்கப்படவில்லை.
ஒரு காலத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டமையும் அதனால் குற்றங்கள் குறைந்தமையும் நினைவிருக்கிறது.
ஆனால் இன்று உயரதிகாரிகளின் செல்வாக்கு, அரசியல் பின்புலம் என பல வடிவங்களில் முறைப்பாட்டாளர்களுக்கே அநீதி இழைக்கப்படுகின்றது.
இதனால் பல ஆசிரியர்களும், அதிபர்களும் பாதிப்படைந்து தண்டனை அனுபவிக்கும் துன்பகரமான சூழ்நிலை இப்போது வடக்கில் உருவாகியுள்ளது.
நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களின் வாய்கள் மூடப்படுகின்றன.
இதைவிட வடமாகாண உயரதிகாரி ஒருவர் தான் பெற்ற விடுமுறையைக்கூட மறந்தவராக தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஊடாக கோரியுள்ளார்.
இவரே பல விசாரணைகளின் தலைவர்.
இத்தகைய செயற்பாடுகளால் பலர் தாங்கமுடியாத மன அழுத்தங்களோடு பணியாற்றுகின்றனர்.
இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு சென்ற பின்னராவது தீர்வு கிடைக்குமா என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள், அதிபர்கள் தமது முறைப்பாடுகளை ஜனாதிபதிக்கும் அனுப்ப முனைந்துள்ளனர்.