ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம்.. கிளம்பும் எதிர்புகளும் பாராட்டுக்களும்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். இவரின் புகைப்படத்திற்கு தற்போது எதிர்ப்பும் பாராட்டுக்களும் கிளம்பியுள்ளது. இந்தி திரையுலகில் 2010-ம் ஆண்டு அறிமுகமான ரன்வீர் சிங், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.

இதன்மூலம் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். பாலிவுட்டில் இப்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் பிரபலம் ரன்வீர் சிங். ஒரு பிரபல வார இதழுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். சிலர் ரன்வீர் சிங்கிற்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, லில்லி சிங், மசாபா குப்தா, தியா மிர்சா, பானி ஜட்ஜ், மஹீப் கபூர், மனிஷ் மல்ஹோத்ரா உட்பட பலரும் இது துணிச்சலான முடிவு என்றும், இதை செய்வதற்கு தைரியம் வேண்டும் என்றும் குறிப்பிட்டு ரன் வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் நிர்வாண புகைப்படத்தைப் பார்த்து சமந்தா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.