தொழில் வழிகாட்டல் பயற்சி செயலமர்வு
மாத்தளை பிரதேச வாலிபர்களின் வளமான எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான தொழில் முயற்சிகளில் தாம் செய்யும் தொழிலில் தேர்ச்சியடைந்து கொள்வதற்குமான ஒரு அறிய வாய்பாக, உக்குவளை அஜ்மீர் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதுக்குற்பட்ட ஒவ்வொருவரும் தொழில்ரீதியாக தம்மை தகைமைப்படுத்திக்கொள்வதற்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
23.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு எமது அஜ்மீர் தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.
உக்குவளை அஜ்மீர் கல்லூரியின் பழைய மாணர்வ சங்கத் தலைவர்ரும் சமூகச் செயற்பாட்டாளருமான சீ. எம். அபூதாலிப் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுங்கத் திணைக்களத்தின் சிரே~;ட அதிகாரி எம். ஏ. எம். நாசீர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
ஏதேனும் காரணங்களால் பாடசாலைக் கல்வியை இடை நிறுத்திய மாணவர்களுக்கும், க. பொ. த. (சா/த) பரீட்சைக்குத் தோற்றி உயர் தரத்திற்குத் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் இது ஓர் அறிய வாய்ப்பாகும். எமது நாட்டிலுள்ள முன்னனி தொழில் வழிகாட்டல் நிறுவனங்களான இன்ஸைட் – கொழும்பு டெக்னிகல் கொலேஜ் நோலேஜ் – பொக்ஸ் – நெஸ்ட் (NEST) ஆகிய நிறுவனங்களிலிருந்து வளவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இத்தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியில் 23 வயதுக்குற்பட்ட தொழில்ரீதியாக தம்மை தகைமைப்படுத்திக்கொள்ள விரும்பும் சகல வாலிபர்களும் தமது பெற்றாருடன் கலந்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்றைய தினமே மேற்படி நிறுவனங்களின் நேர்முகப்பரீட்சை நடைபெறுவதோடு, ஒவ்வொருவரும் தமக்குப் பொருத்தமான தொழில் வழிகாட்டல் பயிற்சிநெறியினைத் தெரிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இவ்வரிய சந்தர்பத்தின் மூலம் பயன்பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி இப்படிக்கு செயலாளர் அஜ்மீர் பழைய மாணவர் சங்கத்தின் செயளலாளர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
21-08-2020