இந்த நாட்டில் தான் கொரோனாவிற்கான முழு பாதுகாப்பு
கொவிட் – 19 வைரஸ் பெரும்பாலான நாடுகளுக்கு பரவியுள்ள போதிலும் அவற்றில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலாம் இடத்தினை பிடித்துள்ளது.
கொரோனா பரவலுக்கான பாதுகாப்பினை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்த இடத்தினை 752 மதிப்பெண்களை பெற்று சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது.
இந்தப்பட்டியலில் இரண்டாம் இடத்தினை 749 மதிப்பெண்களுடன் ஜேர்மனி பிடித்துள்ள அதேவேளை இஸ்ரேல் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய இரு நாடுகளுமே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விரைவாக மீண்டுள்ள அதேவேளை மக்களில் நலன், பாதுகாப்பு விடயங்களிலும் திறம்பட செயல்பட்டுள்ளதனை அடிப்படையாக கொண்டே இந்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தப்பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றுக்கொண்ட நாடுகள்
01. சுவிட்சர்லாந்து
02. ஜேர்மனி
03. இஸ்ரேல்
04. சிங்கப்பூர்
05. ஜப்பான்
06. ஒஸ்திரியா
07. சீனா
08. அவுஸ்திரேலியா
09. நியூசிலாந்து
10. தென்கொரியா
Comments are closed.