மின்சாரம் தடைப்படமைக்கு மின்சக்தி அமைச்சே காரணமெனில் பதவி விலக தயார் – டளஸ்
சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படதற்கு மின்சக்தி அமைச்சே காரணம் என்றால் பதவி விலகத் தயார் என மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மின் தடை பற்றிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கவுள்ளது அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
மின்சக்தி அமைச்சுதான் இதற்கு பதிலளிக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளேன். நான் பதவியேற்று 96 மணித்தியாலங்களே கடந்துள்ள நிலையிலேயே மின் தடை ஏற்பட்டது.
நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமைக்கு மின்சக்தி அமைச்சே காரணம் என்றால், செவ்வாய்க்கிழமையிலிருந்து மின்சக்தி அமைச்சராக நான் இருக்க மாட்டேன். வேறொருவரே மின்சக்தி அமைச்சிற்கு அமைச்சராக இருப்பார்.
அவ்வாறான எடுத்துக்காட்டு இலங்கையில் முதற்தடவையாகப் பதிவாகும் என டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.