எவருக்கும் சோரம் போகாமல் முகுகெலும்புடன் நிற்கிறோம் – சபையில் செல்வம் எம்.பி. உரை.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எவருக்கும் சோரம் போகாமல் முகுகெலும்புடன் செயற்படுவோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது. அவ்வாறு ஒடுக்க முற்பட்டதால்தான் இந்நாட்டில் ஆயுதப் போராட்டம்கூட ஏற்பட்டது. அந்தவகையில் அவசரகாலச் சட்டத்தைக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போய்விட்டது எனச் சில புல்லுருவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டமைப்பு ஒருபோதும் சோரம் போகாது. முகுகெலும்புடன் செயற்படுவோம்” – என்றார்.