எதிர்வரும் 9ம் திகதி போராளிகள் தொடங்கியதை முடிக்க வாருங்கள் : சரத் பொண்சேகா
ஆரம்பித்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக நாடு முழுவதையும் ஒன்று திரட்டி எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்புக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், போராடும் குழந்தைகள் வேறு நோக்கங்களுக்காகப் பிரியாமல், தொடங்கிய அதே நோக்கத்திற்காக செயல்படுமாறும் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
இப்போதைய ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களை துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒடுக்குவதற்கு முயன்று வருவதாகவும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் எவ்வகையிலும் இதற்குள் தலையிட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் ஆட்சியாளர்களுக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று கூறிய சரத் பொன்சேகா, போராடுபவர்களுக்கு தான் எப்போதும் ஆசி வழங்குவதாகவும் தெரிவித்தார்.
சில இடங்களில் சில பெறுமதியான பொருட்கள் அழிக்கப்பட்டதாக சிலர் கூறுவதாகவும், அழிக்கப்பட்ட பொருட்களை விட நாட்டு மக்களுக்கு விடிவொன்றை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் போராளிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.