ஜெர்மனியில் இருந்து இலங்கைக்கு ஒரு மெல்லிய எச்சரிக்கை!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஜேர்மனிக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் போது, ஏற்றுமதியாளர் தரப்பில் மனித உரிமைகள் மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடு மற்றும் தொழிற்சாலைகள் பின்பற்றும் நடைமுறைகள் தொடர்பில் இலங்கை ஏற்றுமதியாளர்களும் அவதானம் செலுத்த வேண்டும் என ஜேர்மன் அரசாங்கத்தின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும் மனித உரிமை ஆர்வலருமான , மார்கஸ் லுனிங் தெரிவித்துள்ளார்.
இன்று (29) ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல், நிலைத்தன்மை போன்றவற்றில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் தற்போது வகுத்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாக்காத நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில்லை எனும் எச்சரிக்கையை அவரது கருத்து வழி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி தனது இறக்குமதிக்கு சீனாவை தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் அதிக விருப்பம் கொண்டுள்ளதால், இலங்கை ஏற்றுமதியாளர்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் மார்கஸ் லுனிங் குறிப்பிட்டுள்ளார்.