மனோ விலகிச் சென்றாலும் கூட்டணி வீறுநடை போடும்! – திகாம்பரம் எம்.பி. பதில்.
“தமிழ் முற்போக்குக் கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர். மனோ கணேசன் அல்ல, நான் விலகினால்கூட கூட்டணி பலமாகப் பயணிக்கும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகவுள்ளார் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்தார்.
‘சூரியன்’ வானொலியில் ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பில் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரத்திடம் ஊடகங்கள் வினவியபோது,
“தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து கூட்டணி மட்டத்தில் மனோ கணேசன் கலந்துரையாடவில்லை. சிலவேளை, வயதாகிவிட்டதால் அவர் அந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்.
யார் விலகினாலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி பலமாக பயணிக்கும். இந்தக் கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர்” – என்று பதிலளித்தார்.