மதுபான விருந்தில் மோதல்; ஒருவர் வெட்டிப் படுகொலை மற்றொருவர் படுகாயம்; இருவர் கைது.
கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் உடபுஸ்ஸல்லாவ – ரப்பானொக் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் ரப்பானொக் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார். படுகாயமடைந்தவர் 21 வயதுடைய இளைஞராவார்.
மேற்படி பிரதேசத்தில் 5 இளைஞர்கள் மதுபான விருந்து நடத்தியிருந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.