துப்பாக்கிச் சூட்டில் இரண்டாவது மரணம் நேற்று பதிவாகியுள்ளது!
அஹங்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அஹங்கம தேனு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மற்றுமொரு நபருடன் ஹோட்டலில் இருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.