பொன்னாலை வரதராஜப் பெருமாள் மகோற்சவம் நாளை ஆரம்பம்
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை (24) முற்பகல் 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள் திருவிழா நடைபெறும்.
5 ஆம் திருவிழாவாகிய 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை முத்துச் சப்பறமும் நடைபெறும்.
செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று முற்பகல் 9.00 மணிக்கு இரதோற்சவம் இடம்பெறும். அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி இடம்பெறும்.
மறுநாள் வியாழக்கிழமை திருவடிநிலை புனித தீர்த்தக் கடலில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மேற்படி நேரங்களில் மாற்றம் இடம்பெறும் எனவும் அடியார்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சைவ சமய விழுமியங்களுக்கு அமைவாக செயற்படுமாறு ஆலய பரிபாலன சபை கேட்டுக்கொண்டுள்ளது.
பக்தர்களின் நலன் கருதி காரைநகருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பேருந்துகள் ஆலய வீதியூடாக பயணம் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.