போராட்டக்காரர்களை கலைந்து செல்ல காவல்துறை அவகாசம் அளித்தாலும், சட்டமா அதிபர் நிராகரிப்பு!

போராட்டக்காரர்களை கலைந்து செல்ல காவல்துறை அவகாசம் அளித்திருந்த போதிலும் ,சட்டமா அதிபர் அதை நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உரிய நீதிமன்ற அனுமதியின்றி “கோட்டா கோ கம” போராட்ட மைதானத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என சட்டமா அதிபர் நேற்றையதினம் (05) மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்தார்.

இதன்படி, இது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கவுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் தாமாக முன்வந்து பிரதேசத்தை விட்டு வெளியேறுவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான சுமத்தி தர்மவர்தன இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் சார்பில் இவ்வாறு அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.