ரூ. 8 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் திருட்டு!
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் ஜயனார் கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து 10 பவுண் நகை மற்றும் இலங்கை ரூபா, வெளிநாட்டு நாணயங்கள் என்பன திருடப்பட்டுள்ளன என்று முறையிடப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி பிற்பகல் வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
வீட்டில் கணவன் மற்றும் மனைவி வசித்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அலுமாரியினுள் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
சில காலங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர்கள் அந்த வீட்டில் தங்கிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.