அங்கஜனின் கடிதத்தால் கோபம் கொண்ட டக்ளஸ் தேவானந்தா
எந்தவொரு அமைச்சர்களின் ஊடாகவும் யாழ். மாவட்டத்தில் எனக்குத் தெரியாது செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டாம் என அங்கயன் இராமநாதன் யாழ். மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி கடிதத்தினால் கோபம் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அக் கடிதத்தை சிங்களத்தில் மொழி பெயர்த்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி
வைத்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான அங்கஜன் இராமநாதனால் 2020-08-18 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரான கனபதிப்பிள்ளை மகேசனிற்கு அனுப்பி வைத்த கடிதமே அமைச்சரை சினம்கொள்ள வைத்துள்ளது. இவ்வாறு மொழி பெயர்ப்புடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்படுகின்றது..
குறித்த கடிதத்தில் உள்ளடங்கிய விடையங்களாக கோட்டபாய ராயபக்ஷ ஜனாதிபதியாக வந்தபின்னர் வந்த திட்டம் அனைத்தும் மக்கள் மயப்படுத்தப்படும்போது எனது தலமையின் கீழ் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து இதனை சகல பிரதேச செயலாளருக்கும் அறிவிப்பதோடு திட்டங்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்.
அனைத்து அமைச்சுக்களின் , அமைச்சர்களின் , அமைச்சுக்களின் செயலாளர்களின் , திணைக்களங்களின் ஊடாக யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தியை அல்லது செயல் திட்டங்களை எனக்கு தெரியாமல் எந்தவொரு அமைச்சுக்களின் ஊடாகவும் யாழ். மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் , மாவட்டச் செயலாளர் உடன் அல்லது பிரதேச செயலாளர் உடன் தொடர்பு கொண்டு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவராகிய எனது அனுமதி இல்லாமல் செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது .