நாட்டை நிர்வகிக்க மக்கள் ஆணை தேவை! உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துங்கள்! எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு வரிசைகள் மற்றும் எண்ணெய் வரிசைகள் ஒரு சிதைவு எனவும், அதற்கு மேலதிகமாக வறுமை, வருமான வறுமை போன்ற சிதைவுகளும் அரசியல் களத்திலும் காணப்படுவதாகவும் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று முன்தினம் (6) தெதிகம தொகுதி இணை அமைப்பாளர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
69 இலட்சம் மக்கள் தேர்வு செய்த ஜனாதிபதி விரட்டியடிக்கப்பட்ட பின் , பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தில் மாத்திரம் வெற்றிபெற்ற ஐ.தே.க உறுப்பினர் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆனதாகவும் , அவரைப் பாதுகாக்க 134 ராஜபக்ச ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நேரத்திலும் எல்லோரும் அமைச்சுப் பதவிகள் வேண்டும் என நினைக்கிறார்கள் , இந்நிலைமை இந்த நேரத்தில் மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.