பிரேசிலின் ஜியு-ஜிட்சு உலக சாம்பியனான லியாண்ட்ரோ லோ சுடப்பட்டு மரணம்.
பிரேசிலின் சிறந்த ஜியு-ஜிட்சு சாம்பியன்களில் ஒருவராகவும் ,வாழ்நாள் சாதனையாளராக எட்டு முறை சாம்பியன் பட்டத்தை பெற்ற ,லியாண்ட்ரோ லோ, சாவ் பாலோவில் உள்ள இரவு விடுதியில் இருந்தபோது தலையில் சுடப்பட்டதனால் உயிர் துறந்துள்ளார்.
33 வயதான லியாண்ட்ரோ லோவை , பணியில் இல்லாத நேரத்தில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுவிட்டு , தப்பியோடிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, சுட்டவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என கடைசியாக கிடைத்த ஊர்சிதமற்ற தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
லியாண்ட்ரோ லோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று , அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட போதிலும் , சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் மூளைச் சாவு அடைந்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் தெற்கில் உள்ள ஒரு இரவு விடுதியில் நண்பர்களுடன் வெளியே இருந்தபோது, பணியில் இல்லாத போலீஸ் அதிகாரி அவரை அணுகி மிரட்டி சுட்டுவிட்டு தப்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கொலை முயற்சி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லியாண்ட்ரோ லோ உலக சாம்பியன்ஷிப்பை மூன்று வெவ்வேறு எடை வகுப்புகளில் எட்டு முறை வென்றுள்ளார், இது ஒரு வாழ்நாள் சாதனையாகும்.