ஐந்து மாத சிசு மர்ம மரணம்
யாழ்ப்பாணம், தென்மராட்சி – நுணாவில் பகுதியில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று நேற்று காலை உயிரிழந்துள்ளது. நுணாவில் வைரவர் கோயில் பகுதியை சேர்ந்த யோ.கிசோபன் என்ற குழந்தையே இவ்வாறு மரணித்துள்ளது.
கடந்த 19ம் திகதி குறித்த குழந்தையை ஏணையில் வைத்து ஆடிய போது குழந்தையின் தலை வீட்டு சுவரில் மோதியுள்ளது. இதனையடுத்து யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை சிகிச்சையின் பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அனுமதித்தனர்.
எனினும் இரு நாட்களின் பின்னர் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை குழந்தை உணர்வற்ற நிலையில் இருப்பதை அவதானித்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.