நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்.

நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தசநாயக்கா சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த புபுது தசநாயக்கா சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அந்த பதவிக்கு மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் பிரபாகர் நேபாள தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக நேபாள கிரிக்கெட் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. இவர் இந்தியாவின் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்தவர். 39 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 130 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் என மொத்தம் 169 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் மூன்று ரஞ்சி டிராபி அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் 2016 இல் இவர் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார்.