தயாசிறி ஜெயசேகரவின் விசனம் தேவையற்ற ஒன்று – சுரேன் ராகவன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் தான் நியமிக்கப்பட்டமை குறித்து சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர விசனமடைவது தேவையற்ற ஒன்றென நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசியப் பட்டியலில் தெரிவு செய்யுமாறு தான் யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே தன்னை தாமாக முன்வந்து தேசியக் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது.

தேசிய பட்டியல் பரிந்துரையில் சுதந்திர கட்சியின் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரைப் புறக்கணித்து சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.