மொட்டு பா.உ. கொலையின் சந்தேக நபர் ஆயுதங்களைக் காட்டச் சென்ற போது கல்குவாரிக்குள் விழுந்து மரணம்!
அங்கொட லொக்காவின் நெருங்கிய நண்பரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான, கடவத்தை, இகல பியன்வில பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டச் சென்ற போது கல் குழியொன்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். .
கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முல்லேரிய வங்கிச் சந்தியில் இனந்தெரியாத இருவரால் கொல்லப்பட்ட கொட்டிகாவத்தை உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷானை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரியான சந்தேகநபர் இவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடுவெல பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர் தகவல் வழங்கியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடவத்தை இகல பியான்வில பகுதியைச் சேர்ந்த துவான் சிரான் ஹர்ஹர் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.