தேர்தல் நடத்தினால் ரணிலுக்கே வெற்றி அடித்துக் கூறுகின்றார் நிமல்.
“இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் ஒன்றை நடத்தினால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள், சிறப்பான தலைமைத்துவதைப் பெரும்பான்மையான மக்கள் எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள்.”
இவ்வாறு துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவாலை எதிர்கொள்ள அச்சமின்றி முன்வந்த யுக புருஷர். அவர் தனது அரசியல் எதிர்காலம் பற்றியோ, வேறு விடயங்கள் குறித்தோ பேசாது சவாலைப் பொறுப்பேற்றார்.
தற்போது நாட்டின் பிரச்சினைகள் சிறிது சிறிதாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடு செல்லும் திசை மிகத் தெளிவானது” – என்றார்.