மின் கட்டண உயர்வு: ஆகஸ்ட் 29 விவாதம்!
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்துக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டெம்பர் 1, 2 ஆகிய திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விவாதம் நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 29ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.