முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு …..
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி மக்கள் போராட்டத்தின் பின்னர் ஆட்சியை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது பாதுகாப்பை நாடி சிங்கப்பூர் சென்று , இன்று (11ஆம் திகதி) சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றார்.
தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள டான் மியூயாங் விமான நிலையத்தின் வழியாக அவர் தாய்லாந்து வந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் தாய்லாந்து விஜயம் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் 90 நாட்கள் நாட்டில் தங்கியிருக்க திரு.கோட்டாபய ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்திருந்தார்.