கொழும்பில் பாகிஸ்தான் போர்க்கப்பல்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் போர்க்கப்பலான PNS Taimur கொழும்பை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் இன்று (12) காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது.
இந்தக் கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை (14) வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சீனக் கப்பலின் வருகை தொடர்பில் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பின்னணியில் இந்த பாகிஸ்தான் கப்பல் இந்த நாட்டை வந்தடைந்துள்ளது.
வேகமான தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவக்கூடிய போர்க்கப்பலான பிஎன்எஸ் தைமூர் வரும் 15ம் தேதி பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளது.
பாகிஸ்தானின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன் பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரியிருந்தது, ஆனால் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அதற்கு அனுமதி வழங்கவில்லை.
சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி வழங்காததாலும், பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு அனுமதி வழங்கியதாலும் இலங்கை தற்போது இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்திருந்தன.