தாய்லாந்து ஃபூகெட் போக இருந்த கோட்டா , பாங்காக் சென்றது ஏன்?
தாய்லாந்திற்கு வரவிருந்த கோட்டாபய தங்குவதற்கு , புகெட் தீவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர் அங்கு வருவதாக தகவல் வெளியானவுடன் , தங்கும் இடத்தை மாற்றி தலைநகர் பாங்கொக்கில் உள்ள ஹோட்டலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஹோட்டலை விட்டு வெளியே வர வேண்டாம் என கோட்டாவுக்குச் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதியை ஹோட்டல் அறையில் தங்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து நேரப்படி நேற்று (11) வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தை ஒட்டிய ராணுவ விமான நிலையத்தின் 6வது பிரிவில் சிங்கப்பூரில் இருந்து ராஜபக்சே மற்றும் மூன்று பேர் வாடகை விமானத்தில் தாய்லாந்து வந்தடைந்தனர்.
கோட்டா வந்த வாடகை விமானம் ஃபூகெட் தீவில் (Phuket Thailand) தரையிறங்க திட்டமிட்டிருந்தது, ஆனால் கோட்டாபய குழுவினரது தகவல்கள் வெளியாட்களுக்கு தெரியவந்ததால், விமானம் பாங்காக்கில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது என்று பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது. ;
எவ்வாறாயினும், ஹோட்டல் அமைந்துள்ள இடம் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக சிறப்புப் பிரிவு பணியகத்தின் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வெளியில் செச்லாமல் , ஹோட்டலில் தங்குமாறு அதிகாரிகள் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் விசா காலாவதியான அதே நாளில் கோட்டாபய பாங்காக் வந்தடைந்தார்.
வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் கோருவதற்கு முன் தற்காலிகமாக தங்குவதற்காக தாய்லாந்து வந்துள்ளார்.