பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவிக்கான உதவித் தொகை.
முல்லைத்தீவு விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் வசிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்ட, தந்தையை இழந்த மாணவி இராஜகோபால் துஷாந்தி அவர்களின் கல்வி ஊக்குவிப்புக்காக மாதாந்தம் 5000 ரூபா வீதம் ஒரு வருடத்திற்கான தொடர்ச்சியான கொடுப்பனவின் முதற்கட்ட கொடுப்பனவினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்.
மேற்குறித்த கொடுப்பனவானது வன்னி ஊடக மையத்தின் வேண்டுகோளுக்கமைய சென் ஜோசப் மக்கள் பேரவை ஊடாக பிரித்தானிய கள் நகரில் வசிக்கும் பிற்விக் கம்பனி உரிமையாளர் திரு.பார்த்தி அவர்கள் இம் மாணவிக்கான நிதியுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், சென் ஜோசப் மக்கள் பேரவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.