மொட்டுகாரர்கள் 19ல் இருந்த சரத்தை 22லும் கேட்கிறார்கள்! முடியாது என்கிறார் விஜேதாச !
பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான 19வது திருத்தச் சட்டத்தில் இருந்த சரத்தை 22வது திருத்தத்தில் உள்ளடக்குமாறு மொட்டு உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கரை வருடங்கள் முடியும் வரை ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என பிரிவு 19 கூறுகிறது.
ஆனால் 20வது திருத்தத்தின் போது பாராளுமன்றம் கலைக்கப்படுவது இரண்டரை ஆண்டுகள் என குறைக்கப்பட்டது.
இதன்படி, விஜேதாச ராஜபக்க்ஷ, 22ஆவது திருத்தச் சட்டத்தில் அதே விதியை உள்ளடக்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்படி மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரிக்க விஜேதாச ராஜபக்க்ஷ முடிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது.
இதனால் 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகுவதற்கு மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.